சட்ட விரோதமாக மது விற்பனை செய்த இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டத்திலுள்ள கோவிந்தபாடியில் குருநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் பழனிசாமி என்பவருடன் டாஸ்மாக் கடையில் மது பாட்டில்களை வாங்கி அதனை பதுக்கி வைத்து சட்ட விரோதமாக விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அந்த தகவலின் படி காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு மது விற்பனை செய்து கொண்டிருந்த குருநாதன் மற்றும் பழனிச்சாமியை கையும் களவுமாகப் பிடித்துவிட்டனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.