Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய 4 பேர்…. போலீஸ் அதிரடி…!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அரியலூர் மாவட்டத்திலுள்ள வாழைக்குறிச்சி பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சந்தேகப்படும்படியாக சுற்றித் திரிந்த 4 பேரை பிடித்து விசாரித்துள்ளனர்.

அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் சிலம்பரசன், சிவா, முகிலன், ஆனந்த் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் 4 பேரும் இணைந்து அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் 4 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |