Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய பெண், சிறுவன்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் சட்ட விரோதமாக நடக்கும் கஞ்சா விற்பனையை தடுக்க காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் நாமக்கல் அருகே உள்ள மாரிகாங்காணி தெருவில் கஞ்சா விற்பனை நடப்பதாக தகவல் கிடைத்த நிலையில் சப்-இன்பெக்டர் சங்கீதா தலைமையில் காவல்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அப்பகுதியை சேர்ந்த புவனேஸ்வரி(40) மற்றும் 16 வயது சிறுவன் ஒருவன் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் விற்பனைக்காக வைத்திருந்த 1 1/2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். இதுனுடைய மதிப்பு 50 ஆயிரம் என போலீசார் தெவித்துள்ளனர்.

Categories

Tech |