சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த புகையிலை பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பி.குளத்துப்பட்டி கிராமத்தில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் பதுக்கிவைத்திருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்பகுதியில் சோதனை செய்தனர். அந்த சோதனையில் ராஜா, வினோத் ஆகிய 2 பேர் சட்டவிரோதமாக வீட்டில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து காவல்துறையினர் சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை பதுக்கி வைத்த 2 பேரையும் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த 2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.