சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வழுதரெட்டி பாண்டியன் நகரில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக தனிப்படை காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் சோதனை செய்தனர். அந்த சோதனையில் திவாகர் என்பவர் வீட்டில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து காவல்துறையினர் சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை பதுக்கி வைத்த திவாகரை கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த 4,250 ரூபாய் மதிப்பிலான புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.