சட்டவிரோதமாக கள் விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள மல்லிக்குட்டை பகுதியில் சட்டவிரோதமாக கள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் சோதனை செய்தனர். அந்த சோதனையில் 2 பேர் சட்டவிரோதமாக கள் விற்பனை செய்தது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து காவல்துறையினர் சட்டவிரோதமாக கள் விற்பனை செய்த பூபாலன், மணி ஆகிய 2 பேரையும் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.