Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய 7 பேர் …. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

பணம் வைத்து சீட்டு விளையாடிய 7 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மேல வெள்ளூர் கிராமத்தில் அமைந்துள்ள ஊருணிக்கரையில்  சிலர் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் சோதனை  செய்தனர். அந்த சோதனையில்  சிலர்  சட்டவிரோதமாக பணம் வைத்து சீட்டு விளையாடுவது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து காவல்துறையினர் சீட்டு விளையாடிய ஆறுமுகம், ஜோசப், பாலமுருகன் உள்ளிட்ட 7 பேரை மடக்கிப்பிடித்து அவர்களிடம் இருந்த  ஆயிரத்து  180  ரூபாய் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |