Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய கடை உரிமையாளர்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!!!

சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடையை காவல்துறையினர் குட்டி சீல் வைத்துள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள கந்தம்பட்டி பகுதியில் சகாபுதீன் என்பவர் வசித்து வருகிறார். இவரது பெட்டி கடையில் சட்ட விரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக குலமங்கலம் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சரக உதவி கமிஷனர் நாகராஜன், இன்ஸ்பெக்டர் சிவகுமார், உணவு பாதுகாப்பு அலுவலர் ரமேஷ் ஆகியோர் சகாபுதீன் கடையில் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் சட்டவிரோதமாக சகாபுதீன் புகையிலை  பொருட்களை விற்பனை செய்தது  தெரியவந்தது. இதனையடுத்து அதிகாரிகள் சகாபுதீனை கைது செய்து கடையை பூட்டி சீல் வைத்துள்ளனர்.

Categories

Tech |