Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி….!!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா எருமாடு அருகே ஒனிமூலா பகுதி அமைந்துள்ளது. இங்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி தேவாலா காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர சோதனை நடத்தினர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் அழைத்து விசாரணை செய்தனர்.

அந்த விசாரணையின் போது ஒனிமூலா பகுதியைச் சேர்ந்த அஜித் என்பது தெரியவந்தது. அவரிடம் சோதனை நடத்தியதில் கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அஜித்தை கைது செய்து சிறையில் அடைத்ததோடு, 1 1/2 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

Categories

Tech |