சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானத்தில் பெரும் அளவில் கடத்த பொருட்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாக முதன்மை கமிஷனர் உதய பாஸ்கருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதனையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் விமான பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர். அப்போது எத்தியோப்பியாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த தென்னாப்பிரிக்காவில் வெனிசூலா நாட்டை சேர்ந்த பிரான்சிஸ் ஜோசப் டோரஸ்(26) என்ற பெண்ணை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி வைத்து விசாரணை நடத்தினர். அவர் சுற்றுலா விசாவில் சென்னை வந்ததாக கூறினார்.
மேலும் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார். இதனையடுத்து அவரது உடைமைகளை சோதனை செய்தபோது அதில் விலை உயர்ந்த போதை பவுடரை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவரிடமிருந்து ரூ.11 கோடி 75 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 218 கிராம் எடை கொண்ட “கொஹைன்” போதை பவுடரை பறிமுதல் செய்தனர். அதனை கடத்தி வந்த வெனிசூலா நாட்டு பெண்ணை கைது செய்தனர். மேலும் அந்த போதை பவுடரை யாருக்காக கடத்தி வந்தார்?,இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என்பதை சங்க இலாகா அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.