மதுபாட்டில்களை கடத்திய குற்றத்திற்காக ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள அகர எலத்தூர் பிரதான சாலையில் மதுபாட்டில்களை கடத்தி வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் அவ்வழியாக சென்ற ஒரு நபரை நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர்.
அந்த விசாரணையில் அவர் திருநள்ளாறு மீனவர் காலனியில் வசித்து வரும் கார்த்திகேயன் என்பதும், காரைக்காலிலிருந்து 100 மது பாட்டில்கள் மற்றும் 250 சாராய பாட்டில்களை கடத்திச் வந்ததும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து கார்த்திகேயன் மீது வழக்கு பதிந்த காவல்துறையினர் அவரை கைது செய்து அவரிடமிருந்து ரூபாய் 15 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.