Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய வெளிநாட்டு வாலிபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக வெளிநாட்டு வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கீரணத்தம் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சந்தேகப்படும் படியாக அப்பகுதியில் நின்று கொண்டிருந்த ஆப்பிரிக்க வாலிபரை காவல்துறையினர் பிடித்து சோதனை செய்துள்ளனர். அப்போது அந்த வாலிபரிடம் 2 1/2 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் ஆப்பிரிக்க கண்டத்தில் இருக்கும் ருவாண்டா நாட்டை சேர்ந்த ஸ்டெப்பின்ஸ் என்பது தெரியவந்துள்ளது. கடந்த 2012-ஆம் ஆண்டு கோவையில் இருக்கும் கல்லூரியில் எம்.சி.ஏ படிப்பதற்காக ஸ்டெப்பின்ஸ் வந்துள்ளார். இவரது விசா காலம் கடந்த ஆண்டு ஜூலை மாதமே முடிவடைந்து விட்டது. ஆனால் சட்டவிரோதமாக ஸ்டெப்பின்ஸ் கோவையில் தங்கி இருந்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஸ்டெப்பின்ஸை கைது செய்ததோடு, அவரிடம் இருந்த மோட்டார் சைக்கிள், கஞ்சா மற்றும் 2 செல்போன்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |