கடையில் குட்காவை பதுக்கி வைத்து விற்பனை செய்த குற்றத்திற்காக காவல்துறையினர் ஒருவரை கைது செய்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திண்டிவனம் இந்திராகாந்தி பேருந்து நிலையம் அருகில் குட்கா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்படி காவல்துறையினர் இந்திராகாந்தி பேருந்து நிலையம் அருகே உள்ள கடையில் சோதனை செய்துள்ளனர். அப்போது கடையில் சட்ட விரோதமாக குட்கா பொருளை பதுக்கி வைத்து விற்பனை செய்தது உறுதியானது.
இதனையடுத்து கடை உரிமையாளரிடம் நடத்திய விசாரணையில் அவர் கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த தேவதாஸ் என்பது தெரியவந்துள்ளது. அதன்பின் தேவதாஸை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் கடையிலிருந்த குட்கா பொருட்களை பறிமுதல் செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.