சட்டவிரோதமாக மணல் கடத்திய குற்றத்திற்காக இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள வி.கைகாட்டி பகுதியில் சட்டவிரோதமாக கிராவல் மண் அள்ளப்படுவதாக கிராம நிர்வாக அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி கிராம நிர்வாக அலுவலரும், காவல்துறையினர் அங்கு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பொக்லைன் எந்திரம் மூலம் டிப்பர் லாரி மற்றும் டிராக்டரில் மணல் அள்ளிக் கொண்டிருந்த 2 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்தனர்.
அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் பாலகிருஷ்ணன் மற்றும் கண்ணதாசன் என்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து பாலகிருஷ்ணன் மற்றும் கண்ணதாசன் ஆகிய இரண்டு பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மணல் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட பொக்லைன் எந்திரம், டிப்பர் லாரி, டிராக்டர் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.