சட்ட விரோதமாக சாராயம் தயாரித்து விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வாராப்பூர் பகுதியில் சட்டவிரோதமாக சாராயம் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கணேசன் என்பவர் வீட்டிற்கு பின்புறம் சாராய ஊறல் வைத்து பானையில் சாராயம் தயார் செய்தது தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் கணேசனை கைது செய்தனர். மேலும் 3 லிட்டர் சாராயத்தையும், சாராய ஊறலையும் போலீசார் பறிமுதல் செய்து அழித்தனர்.