Categories
தேசிய செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. விமான நிலைய குப்பைத் தொட்டியில் ரூ.36.6 லட்சம் தங்கம் பறிமுதல்…… அதிகாரிகள் அதிரடி….!!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் லக்னோவில் உள்ள சவுத்ரி சரண் சிங் விமான நிலையத்தில் உள்ள ஒரு குப்பைத் தொட்டியில் தங்க கட்டிகள் கிடப்பதாக சுங்க அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு சென்று சுங்க அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது குப்பைத்தொட்டியில் இருந்து 6 தங்கக் கட்டிகளை கைப்பற்றினர்.

அந்த தங்க கட்டிகளின் மதிப்பு ரூ.36 லட்சத்து 60 ஆயிரம் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தங்க கட்டிகளை சட்டவிரதமாக கடத்தி வந்தவர்கள் தான் அவற்றை குப்பைத்தொட்டியில் வீசி இருக்க வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |