Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வீட்டில் பதுக்கிய மான் கொம்பு-தோல்…. ஜோதிடர் அதிரடி கைது…!!

ஜோதிடர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த மான்கொம்பு, தோல் ஆகியவற்றை வனத்துறையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ரெட்டியபட்டியில் மான்கொம்பு, தோல் ஆகியவற்றை பதுக்கி வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி மாவட்ட வன அலுவலர் பிரபு தலைமையில் வனத்துறையினர் அப்பகுதிக்கு சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஜோதிடம் பார்த்து வந்த சுந்தரமூர்த்தி என்பவரது வீட்டில் மான் கொம்பு, ஆமை ஓடு, மான்தோல், நரிப்பல் ஆகியவை பதுக்கி வைத்து இருந்ததை வனத்துறையினர் கண்டுபிடித்தனர்.

இதனையடுத்து 2 காட்டுப்பன்றி மண்டைஓடு, 11 காட்டுப்பன்றி பல், 6 நரிப்பல், 17 ஆமை ஓடு, 3 கடமான் கொம்பு, 3புள்ளி மான் தோல் ஆகியவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த வனத்துறையினர் சுந்தரமூர்த்தியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |