Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கிடைத்த ரகசிய தகவல்…. 1,100 கிலோ சுக்கு பறிமுதல்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

இலங்கைக்கு கடத்த முயன்ற 1,100 கிலோ சுக்கு பிடிபட்ட நிலையில் கடத்தலில் ஈடுபட்ட ஒருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் உள்ள வேதாளை கடற்கரையில் இருந்து இலங்கைக்கு பொருள்களை கடத்துவதாக குற்றத் தடுப்புப் பிரிவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் நவநீதன் தலைமையில் தனிப் பிரிவு காவல்துறையினர் அப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். அப்போது படகில் ஏற்றுவதற்காக வைத்திருந்த 20 சாக்கு மூட்டைகளில் பிடித்து சோதனை செய்துள்ளனர்.

அதில் சுமார் 1,100 கிலோ சுக்கு இருந்துள்ளது. அதனை பறிமுதல் செய்த காவல்துறையினர் அதனை கடத்த முயன்ற ராஜாமுகமது என்பவரை கைது செய்துள்ளனர். இதனையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் கடத்தலில் ஈடுபட்ட மற்ற குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் இலங்கைக்கு மஞ்சள், கஞ்சா, பீடி போன்றவை கடத்தப்படும் நிலையில் முதல்முறையாக சுக்கு கடத்த முயன்றது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |