தீவிர வாகன சோதனையின் போது காவல்துறையினரால் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் அரிசி கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி லூர்துமாதா பகுதியில் கடலோர பாதுகாப்பு குழும காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியே வந்த ஒரு காரை காவல்துறையினர் மறித்து சோதனை செய்துள்ளனர்.
அந்த சோதனையில் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. அதில் மொத்தம் 2 3/4 டன் அரிசி இருந்தது. இதை பறிமுதல் செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சாமியார்மடம் பகுதியைச் சேர்ந்த பிபின் என்பது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் பிபினை கைது செய்து உணவு கடத்தல் பிரிவு காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.