Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்… 20 ஆயிரம் பிளாஸ்டிக் டம்ளர்கள் பறிமுதல்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் பிளாஸ்டிக் டம்ளர்கள், பாலிதீன் பைகளை விற்பனை செய்து வருகின்றனர். இந்த பிளாஸ்டிக் டம்ளர்களும், பாலித்தீன் பைகளும் வெளியூர்களில் இருந்து கடத்தி வரப்படுவதால் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் லாரி மூலம் மதுரையிலிருந்து பிளாஸ்டிக் டம்ளர்கள் கடத்தி வருவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி மாநகர நல அலுவலர் இந்திரா தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் திண்டுக்கல்லில் இருக்கும் லாரி புக்கிங் பார்சல் அலுவலகங்களை கண்காணித்தனர்.

அப்போது தாலுக்கா அலுவலக சாலையில் இருக்கும் லாரி புக்கிங் அலுவலகத்திற்கு மூன்று பெரிய அட்டை பெட்டிகள் லாரி மூலம் கொண்டுவரப்பட்டது. அதனை சோதனை செய்தபோது தடை செய்யப்பட்ட 20,000 பிளாஸ்டிக் டம்ளர்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அதிகாரிகள் பிளாஸ்டிக் டம்ளர்களை பறிமுதல் செய்து லாரி புக்கிங் அலுவலக உரிமையாளரை எச்சரித்துள்ளனர். மேலும் ஆர்டர் கொடுத்தவர், விற்பனை செய்தவர்கள் விவரம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |