Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்…. 3 பேர் கைது…. போலீசார் அதிரடி….!!!!

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகில் கீழக்குறிச்சி கிராமத்தில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக வேப்பூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அந்த பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் இருந்து மூட்டைகளை சிலர் சரக்கு வாகனத்தில் ஏற்றிக்கொண்டு இருந்தனர். இதில் சந்தேகம் அடைந்த போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது ரேஷன் அரிசி மூட்டைகளை சரக்கு வாகனத்தில் கடத்த முயன்றது தெரிய வந்தது. இதனையடுத்து அங்கிருந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில் அவர்கள் மங்களூர் பகுதியை சேர்ந்த பெரியசாமி(38), இவருடைய மருமகன் காசிலிங்கம்(25), சரக்கு வாகன டிரைவர் பாலமுருகன் ஆகியோர் என்பது தெரிய வந்தது. அதனை தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் கடத்த முயன்று 500 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளையும் மற்றும் சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்தனர். அதன் பிறகு கைது செய்யப்பட்டவர்களையும் பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியும் குடிமை பொருள் கடத்த குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபிநாத்திடம் போலீசார் ஒப்படைத்தனர். மேலும் தப்பி உடைய பழனிவேல் என்பவரை போலிசார் தீவிரமாக தேடி வருகின்றன.

Categories

Tech |