Categories
தேனி மாவட்ட செய்திகள்

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள்…. 7 மூட்டைகள் பறிமுதல்…. 2 பேர் கைது….!!

அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தேனி மாவட்டம் கம்பம்-கூடலூர் சாலையில் உள்ள ஒரு தோட்டத்தில் வைத்து சட்டவிரோதமாக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கம்பம் தெற்கு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபாண்டியன் தலைமையில் காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் சந்தேகப்படும்படி சாக்கு மூட்டைகளுடன் நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர்.

அந்த விசாரணையில் அவர்கள் கம்பம் முகைதீன் ஆண்டவர் பள்ளி தெருவில் வசிக்கும் அப்துல் காதர், முகமது ஆசிக் என்பது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவர்கள் வைத்திருந்த 7 சாக்கு மூட்டைகளில் சுமார் 60 ஆயிரம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் இருந்துள்ளது. அதனை பறிமுதல் செய்த காவல்துறையினர் 2 பேரையும் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |