Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. 9 பேரை சுற்றி வளைத்த போலீசார்…. 170 கிலோ கஞ்சா பறிமுதல்….!!

இலங்கைக்கு கடத்துவதற்காக ஆந்திராவில் இருந்து கொண்டுவரப்பட்ட 170 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் 9 பேரை கைது செய்துள்ளனர்.

நாகை மாவட்டம் கீழையூரை அடுத்துள்ள வேட்டைக்காரனிருப்பு பகுதியில் வசிக்கும் சுதாகர் என்பவர் சட்டவிரோதமாக கஞ்சாவை இலங்கைக்கு கடத்துவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி ஜவகரின் உத்தரவின்படி சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று வேட்டைக்காரனிருப்பு புதுப்பாலம் அருகே காவல்துறையினர் ரகசியமாக கண்காணிப்பில் ஈடுபட்டபோது சுதாகர் உட்பட 3 பேர் பாலம் அருகே நின்றுகொண்டிருந்தனர்.

அப்போது அங்கு 2 சொகுசு காரில் வந்த 6 பேர் சுதாகரிடம் ரகசியமாக பேசிக்கொண்டிருந்தனர். இதனைபார்த்த தனிப்படையினர் உடனடியாக அங்கிருந்த 9 பேரையும் சுற்றிவளைத்துள்ளனர். இதனையடுத்து அந்த சொகுசு காரில் நடத்திய சோதனையில் சுமார் 170 கிலோ எடையுள்ள கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. அதனை பறிமுதல் செய்த காவல்துறையினர் 9 பேரையும் கைது செய்து காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.

இந்நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் வேட்டைக்காரனிருப்பு பகுதியை சேர்ந்த சுதாகரன், பிரபாகரன், சுதர்சன், கேரள மாநிலத்தை சேர்ந்த குமார், உத்தப்பன், அக்க்ஷய், சீனுபிரைட், ஆந்திரா விசாகபட்டினத்தை சேர்ந்த அனீஸ், நாகராஜன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் ஆந்திராவில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக கஞ்சா கொண்டுவரப்பட்டது தெரியவந்த நிலையில் போலீசார் 9 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு 50 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |