Categories
பல்சுவை

“கிட்டத்தட்ட மரணம் வரை நடனமாடிய ஒரு நகரம்”….. 500 வருடமாக தீர்க்க முடியாத மர்மம்….. எங்கு தெரியுமா?….!!!!

பல வருடங்களுக்கு முன்பு பலரும் பல விதமான நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது அறிவியல் முன்னேற்றம் மருத்துவத்துறையின் முன்னேற்றத்தின் காரணமாக அனைத்தையும் விரைவில் கண்டறிய முடிகிறது. ஆனால் அந்த காலத்தில் அறிவியல், மருத்துவத்துறை போன்றவை முன்னேற்றமடையாத நேரத்தில் பல விசித்திர சம்பவங்கள் நடக்கும். இவை அனைத்தும் தற்போது வரை விடை தெரியாத மர்மங்களாகவே இருந்து வருகின்றது. அந்தவகையில் பிரான்சில் 500 வருடங்களுக்கு முன்பு ரோட்டில் தனியாக நடந்து சென்று கொண்டிருந்த நபர் திடீரென்று நடனமாட ஆரம்பிக்கிறார். இதை பார்த்த பலரும் இவர் மகிழ்ச்சியின் காரணமாகத்தான் இப்படி ரோட்டில் நடனமாடி வருகிறார் என்று நினைத்துள்ளனர்.

இதையடுத்து மறுநாள் வந்து பார்க்கும் பொழுது அந்த நபர் அதே இடத்தில் நிற்காமல் ஆடிக்கொண்டே இருந்துள்ளார். அவருடன் சேர்ந்து வேறு சிலரும் நடனமாட தொடங்கியுள்ளனர். இதைப் பார்த்து சிலருக்கு இது இது என்ன புதிதாக உள்ளது என்று சந்தேகம் எழுந்துள்ளது. இப்படியே நாட்கள் செல்ல செல்ல அந்த இடத்தில் பலரும் இணைந்து நடனமாட தொடங்கியுள்ளனர். அந்த இடத்தில் மட்டும் கிட்டத்தட்ட 100 க்கும் மேற்பட்ட நபர்கள் நடனமாட தொடங்கியுள்ளனர். அதில் சிலர் பல நாட்களாக நடனம் ஆடி வருவதால் மூச்சுத்திணறல், நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்து இறக்க ஆரம்பிக்கிறார்கள். இதற்கு பிறகுதான் தெரிய வருகிறது இது ஒரு நோய் என்பது. இதற்கு அவர்கள் டான்சிங் பிளேக் என்று பெயர் வைத்துள்ளார்கள்.

இந்த நோய்க்கான சரியான காரணம் என்னவென்று இப்போது வரை தெரியவில்லை. ஆனால் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் இந்த நோய்க்கான காரணம் என்னவாக இருக்கும் என்று கூறுகிறார்கள் என்றால் கோதுமை மாதிரியான தாவரங்களில் ஏற்காட் என்கின்ற நோய் ஏற்படும். அந்த நோயினால் ஏற்பட்ட கோதுமைகளை வைத்து உணவுகளை சமைத்து சாப்பிட்டு இருக்கலாம் என்பதால், இப்படி ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கின்றனர். இந்த சம்பவம் தற்போது வரை யாராலும் தீர்த்து வைக்க முடியாத மர்மமாகவே நீடித்து வருகிறது.

Categories

Tech |