Categories
தேசிய செய்திகள்

கிட்னியை நான் வாங்கிக்கொள்கிறேன்!… ஏமார்ந்துபோன கல்லூரி மாணவி!…. பரபரப்பு நிறைந்த பின்னணி….!!!!

ஆந்திரா பிரஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி குண்டூரிலுள்ள தனியார் கல்லூரியில் இன்டர்மீடியட் 2ஆம் ஆண்டு பயின்று வருகிறார். இவர் தனது தந்தை பீரோவில் வைத்திருந்த ரூபாய்.80 ஆயிரத்தை அவருக்கு தெரியாமல் எடுத்துவந்து தன்னுடன் படிக்கும் நண்பர்களுக்கு செலவு செய்துள்ளார். இந்நிலையில் தந்தைக்கு தெரியாமல் எடுத்துவந்த பணத்தை மீண்டுமாக பீரோவில் வைக்கவேண்டும் என்பதற்காக தன் கிட்னியை விற்பனை செய்வதாக மாணவி ஆன்லைனில் பதிவிட்டிருந்தார். இதை பார்த்த பிரவீன்ராஜ் என்பவர் கூறியதாவது “தான் அமெரிக்காவில் உள்ளேன். அங்குள்ள ஒருவருக்கு இந்தியாவிலுள்ள ஒருவரின் கிட்னி அவசரமாக தேவைப்படுகிறது. ஆகவே சிறுநீரகம் கொடுத்தால் ரூபாய்.7 கோடி தருவதாக மருத்துவமனையின் பெயர், விலாசம், டாக்டரின் புகைப்படம் மற்றும் வாட்ஸ்அப் எண்ணை பதிவிட்டிருந்தார்”.

அதன்பின் இதற்கு சம்மதம் தெரிவித்த அந்த மாணவி தன் தந்தையின் வங்கி எண்ணை பிரவீன்ராஜ் வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பிவைத்தார். பின் பிரவீன்ராஜ் மாணவியின் தந்தை வங்கி கணக்கில் ரூபாய் 3.50 கோடி அனுப்பியதோடு, அதை செல்போனில் ஸ்க்ரீன்ஷாட் எடுத்து அனுப்பியிருந்தார். அதுமட்டுமின்றி பிரவீன்ராஜ் அமெரிக்காவிலிருந்து டாலரில் பணம் அனுப்பி இருப்பதாகவும், அதனை இந்திய ரூபாய் நோட்டுக்களாக மாற்ற வேண்டுமென்றால் ரூபாய்.16 லட்சத்தை அனுப்பி வைக்குமாறு மாணவியிடம் தெரிவித்து இருந்தார். இதை நம்பிய மாணவி தனக்கு தெரிந்தவர்களிடம் ரூபாய்.16 லட்சத்தை கடனாக பெற்று பிரவீன்ராஜ் வங்கி கணக்கிற்கு அனுப்பிவைத்தார். அதனை தொடர்ந்து மாணவி அவரது தந்தையின் வங்கிக்கணக்கை சரிபார்த்தபோது பணம் எதுவும் வரவில்லை என தெரியவந்தது.

இதனால் மீண்டும் மாணவி பிரவீன்ராஜை தொடர்புகொண்டு தந்தையின் வங்கி கணக்கிற்கு பணம் வரவில்லை என்று தெரிவித்தார். அதற்கு பிரவீன்ராஜ் நீ டெல்லிக்கு வந்தால் நான் பணம் தருகிறேன் என மாணவியிடம் கூறியுள்ளார். அதன்படி மாணவி விமானத்தில் டெல்லிக்கு சென்று பிரிவின்ராஜ் செல்போன் எண்ணை தொடர்புகொண்டபோது அவர் சிறிது நேரத்தில் வருகிறேன் என கூறினார். எனினும் கடைசிவரை வராமல் மாணவியை ஏமாற்றி விட்டார். இதனால் விரக்தியடைந்த மாணவி தன் செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு வீட்டிற்கு செல்லாமல் என்.டி.ஆர் மாவட்டம் கன்சிகா சர்லா என்ற ஊருக்கு சென்றுவிட்டார்.

நண்பரின் வீட்டிற்கு சென்று வருவதாக கூறி விட்டு சென்ற மகளின் செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்ததால் சந்தேகமடைந்த அவரது பெற்றோர் குண்டூர் போலீஸ் சூப்பிரண்டு ஆரிப் அபீசிடம் புகார் அளித்தனர். அதன்படி காவல்துறையினர் மாணவியின் செல்போன் எண்ணை வைத்து அவரை கண்டுபிடித்து அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது முழு விவரத்தையும் மாணவி காவல்துறையினரிடம் தெரிவித்தார். அதன்பிறகு சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மாணவியிடம் பணத்தை ஏமாற்றியவர் யார் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |