Categories
மாநில செய்திகள்

கிட்னி செயலிழப்பால் அவதிப்படும் போண்டாமணி….. நலம் விசாரித்த அமைச்சர்….!!

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகரில் ஒருவர் போண்டாமணி. இவர் இலங்கையை பூர்விகமாக கொண்டவர். இவருக்கு மாதவி என்ற மனைவியும், சாய்ராம் என்ற மகன், சாயம்மாள் என்ற மகளும் உள்ளனர். போண்டாமணி சினிமா துறையில் சாதிக்க நீண்ட நெடிய போராட்டங்கள் பிறகு நகைச்சுவை உலகில் அவருக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டார். வடிவேலு நகைச்சுவை பட்டாளத்தில் ஒருவரான இவர் பல படங்கள் அவருடன் இணைந்து நடித்துள்ளார். ரன், சுந்தரம் ட்ராவல்ஸ், வின்னர், திருமலை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

குறிப்பாக சுந்தரம் ட்ராவல்ஸ் படத்தில் வடிவேலுவுடன் இடம்பெற்ற இவரின் காமெடி காட்சி இன்றளவு ரசிகர்கள் விரும்பும் காட்சிகளில் ஒன்றாக உள்ளது. இதற்கிடையில் போண்டாமணி 2 சிறுநீரகங்களும் செயலிழந்து சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு சிறுநீரக பிரிவில் டயாலிசிஸ் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடிகர் போண்டாமணியை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார். அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

 

 

Categories

Tech |