மதுரையில் கிணற்றில் வாலிபர் பிணமாக மிதந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் பேரையூரில் செல்வராஜ் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் கிருஷ்ணாபுரத்திலிருக்கும் கிணற்றில் பிணமாக மிதந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அப்புகாரை ஏற்ற காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலை மீட்டனர்.
இதனையடுத்து காவல்துறையினர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே செல்வராஜ் எவ்வாறு இறந்தார் என்பது குறித்தும் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.