Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கிணற்றிலிருந்து வந்த சத்தம்…. அதிர்ச்சியடைந்த உரிமையாளர்…. தீயணைப்பு வீரர்களின் செயல்….!!

கிணற்றில் விழுந்த கன்று குட்டியை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆத்தியப்பட்டி கிராமத்தில் விவசாயியான பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான கன்றுக்குட்டி அப்பகுதியில் இருக்கும் 20 அடி ஆழ தண்ணீர் இல்லாத கிணற்றில் விழுந்தது. இதனை அடுத்து கன்று குட்டியின் சத்தம் கேட்டு பாலகிருஷ்ணன் அங்கு சென்றார். அப்போது கன்றுக்குட்டி கிணற்றில் விழுந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தார். அதன் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி கன்று குட்டியை பத்திரமாக மீட்டனர்.

Categories

Tech |