Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“கிணற்றில் சீறிக்கொண்டிருந்த நல்லபாம்பு” அதிர்ச்சியில் உறைந்த விவசாயி…. தீயணைப்பு வீரர்களின் செயல்….!!!!

கிணற்றுக்குள் விழுந்த நல்ல பாம்பை தீயணைப்பு வீரர்கள் மீட்டுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள  சத்திரப்பட்டி  கிராமத்தில் விவசாயியான பெரியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக அதே பகுதியில் விவசாய தோட்டம்  ஒன்று உள்ளது. இந்த  தோட்டத்தில் அமைந்துள்ள  கிணற்றில் 8 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பு   ஒன்று தவறி விழுந்துள்ளது. அந்த பாம்பு   மேலே வர முடியாமல் படம் எடுத்தபடி சீறிக்கொண்டு இருந்துள்ளது.

இதனை பார்த்த அதிர்ச்சி   அடைந்த விவசாயி ஒருவர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி கிணற்றுக்குள் இறங்கி வலை மூலம் பாம்பை உயிருடன் மீட்டுள்ளனர். இதனையடுத்து தீயணைப்பு துறையினர் அந்த பாம்பை கொண்டு அருகிலிருந்த வனப்பகுதியில் விட்டுள்ளனர்.

Categories

Tech |