மகனைக் காப்பாற்ற நீச்சல் தெரியாமல் கிணற்றில் குறித்த தாயும் சேர்ந்து மகனுடன் இறந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
மதுரை மாவட்டத்தில் இருக்கும் கல்மேடு பகுதியை சேர்ந்த பள்ளி மாணவரான யோகேஷ் என்பவர் நேற்று மதியம் தனது வீட்டின் அருகே இருந்த கிணற்றில் குளிக்க சென்றுள்ளார். கிணற்றில் குளித்துக் கொண்டிருந்த யோகேஷ் திடீரென நீரில் மூழ்கி உள்ளார். இதனால் தன்னை காப்பாற்ற வேண்டும் என்று யோகேஷ் சத்தமிட மகனின் அழுகுரல் கேட்டு தாய் செல்வி சென்று பார்த்தபோது யோகேஷ் தண்ணீரில் மூழ்கி கொண்டிருந்தான்.
இதனால் சிறிதும் காலம் தாழ்த்தாமல் தனது மகனை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக தாய் செல்வி கிணற்றில் குதித்தார். ஆனால் மகனை காப்பாற்ற சென்ற செல்வியும் கிணற்றில் மூழ்கி மூச்சுத்திணறி உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
நீச்சல் தெரியவில்லை என்றாலும் கிணற்றில் மூழ்கிய மகனை காப்பாற்றுவதற்காக தாய் கிணற்றில் குதித்து மரணமடைந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.