கிணற்றில் கிடந்த பெண்ணின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள செல்லரப்பட்டி கிராமத்தில் சந்தோஷ் பிரியா என்பவர் தனது தாத்தாவுடன் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் கல்வி நிறுவனத்தில் குருப் தேர்விற்காக படித்து வந்துள்ளார். இதனையடுத்து சந்தோஷ் பிரியா அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்தோஷ் பிரியா திடீரென மாயமானார். ஆனால் அவரது குடும்பத்தினர் சந்தோஷ் பிரியா தனது காதலனோடு சென்றிருக்கலாம் என கூறி காவல் நிலையத்தில் புகார் அளிக்கவில்லை.
இந்நிலையில் நேற்று அதே பகுதியில் அமைந்துள்ள ஒரு கிணற்றில் சந்தோஷ் பிரியாவின் தலை துண்டிக்கப்பட்டு உடலும், தளையும் அழுகிய நிலையில் கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சந்தோஷ் பிரியாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரது காதலனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது