புதுக்கோட்டை மாவட்டத்தில் கிணற்றில் குளிக்க சென்ற போது பெண் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பிராம்பட்டி பகுதியில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி கவிதா என்ற மனைவி இருந்தார். இத்தம்பதிகளுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கவிதா அப்பகுதியிலுள்ள கிணற்றில் குளிக்கச் சென்ற போது எதிர்பாராத விதமாக கால் தவறி கிணற்றுக்குள் விழுந்து விட்டார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதுக்குறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கவிதாவின் உடலை இறந்த இழந்த நிலையில் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.