புதுக்கோட்டை மாவட்டத்தில் கிணற்றில் தவறி விழுந்த காளையை தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பொன்னமராவதி பகுதியில் வசித்து வரும் சதீஷ்குமார் என்பவர் ஜல்லிக்கட்டு காளை ஒன்றை தனது வீட்டில் வளர்த்து வருகிறார். இந்நிலையில் அந்த காளை மேய்ச்சலுக்கு சென்ற போது அங்குள்ள ராமசாமி என்பவருக்கு சொந்தமான தண்ணீரில்லா 40 அடி ஆழமுள்ள கிணற்றில் காளை தவறி விழுந்துள்ளது.
அப்போது அங்கு வேலை செய்து கொண்டிருந்தவர்கள் கிணற்றினுள் காளையின் சத்தம் கேட்டதால் அதிர்ச்சியடைந்த தொழிலார்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுக்குறித்து தகவலறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காளையை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சுமார் ஒரு மணி நேரம் போராடி காளையை உயிருடன் மீட்டுள்ளனர்.