கிணற்றில் தவறி விழுந்து விசைத்தறி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை அடுத்துள்ள ஓலப்பாளையம் எம்.ஜி.ஆர் நகரில் முத்துசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். விசைத்தறி தொழிலாளியான இவருக்கு ரதி என்ற மனைவியும் 2 பிள்ளைகளும் உள்ளனர். இந்நிலையில் வீட்டிற்கு வெளியே நடந்து சென்று கொண்டிருந்த முத்துசாமி அப்பகுதியில் உள்ள கிணற்றில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்துள்ளார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக குமாரபாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முத்துசாமியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு உயிரிழந்தத முத்துசாமியின் உடலை மீட்டு மேலே கொண்டு வந்தனர். இதனையடுத்து இதுகுறித்து தகவலறிந்து சென்ற குமாரபாளையம் காவல்துறையினர் முத்துசாமியின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.