புதுமாப்பிள்ளை தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள பள்ளிபாளையம் பகுதியில் விவசாயியான சம்பத்குமார்(26) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சம்பத்குமாருக்கு சரண்யா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. நேற்று தோட்டத்தில் ஓடிக்கொண்டிருந்த மின் மோட்டாரை நிறுத்துவதற்காக சம்பத்குமார் சென்றுள்ளார். இந்நிலையில் கிணற்றில் தண்ணீர் எந்த உயரத்திற்கு உள்ளது என எட்டி பார்த்தபோது எதிர்பாராதவிதமாக சம்பத்குமார் கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.
அவரது சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் சம்பத்குமாரை காப்பாற்ற முயற்சி செய்தனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சம்பத்குமாரின் உடலை மீட்டனர். பின்னர் வாலிபரின் உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.