Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

கிணற்றுக்குள் விழுந்த சிறுமி….. காப்பாற்ற முயன்ற இளம்பெண்ணும் பலி…. தென்காசியில் பரபரப்பு….!!

சிறுமியும், அவரை காப்பாற்ற சென்ற இளம்பெண்ணும் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள நாராயணபுரம் பகுதியில் ஏழுமலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மலர் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கூலி வேலைக்காக தம்பதியினர் தென்காசி மாவட்டத்தில் உள்ள சிவகிரிக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் ராஜசிங்கபேரி கண்மாய் அருகே இருக்கும் கரும்பு தோட்டத்தில் ஏழுமலையும், மலரும் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். இதனை அடுத்து முடுக்காங்கரையில் இருக்கும் தனியாருக்கு சொந்தமான கிணற்றில் மலர் குளிப்பதற்காக சென்றுள்ளார். அவருடன் உறவினரான கார்த்திக் என்பவரது மகள் ஜீவஸ்ரீயும்(4) சென்றுள்ளார். இருவரும் கிணற்றின் படிக்கட்டில் நின்று குளித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக ஜீவஸ்ரீ கால் தவறி கிணற்றுக்குள் விழுந்துவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மலர் சிறுமியை காப்பாற்றுவதற்காக கிணற்றுக்குள் குதித்துள்ளார். ஆனால் மலர், சிறுமி ஆகிய இருவரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து அறிந்த திணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பல மணிநேர போராட்டத்திற்கு பிறகு இரண்டு பேரின் உடல்களையும் மீட்டனர். பிறகு இரண்டு பேரின் உடல்களும் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |