கிணற்றுக்குள் விழுந்த 13 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பை தீயணைப்பு வீரர்கள் மீட்டுள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கரிசல்பட்டி கிராமத்தில் நைனார் முகமது என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அதே பகுதியில் 40 அடி ஆழமுள்ள கிணறு ஒன்று உள்ளது. இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வந்த 13 அடி மலைப்பாம்பு ஒன்று நிலைதடுமாறி கிணற்றுக்குள் விழுந்து விட்டது. இதனைப் பார்த்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் போராடி மலைப்பாம்பை கிணற்றிலிருந்து வெளியே கொண்டு வந்துள்ளனர். அதன் பின்னர் 13 அடி நீளமுள்ள மலைப்பாம்பை வனத்துறையினர் வனப்பகுதிக்கு கொண்டு விட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.