கிணற்றுக்குள் தவறி விழுந்து புள்ளிமான் இறந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டை பகுதியில் இருக்கும் கிணற்றில் புள்ளிமான் இறந்து கிடப்பதாக பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் விழுந்து உயிரிழந்த புள்ளிமானின் உடலை மீட்டனர்.
அதன்பிறகு மானின் உடலானது வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து கால்நடை மருத்துவர் சத்யபிரபாஸ் முன்னிலையில் உயிரிழந்த மானின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு காட்டுப்பகுதியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.