Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

கிணற்றுக்கு குளிக்க சென்ற பள்ளி மாணவர்கள்… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி… நடந்தது என்ன…?

கிணற்றுக்கு குளிக்க சென்ற மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை அருகே சுரவாரிகண்டிகை கிராமத்தில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் நகுல் (12) ஆறாம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியில் வசித்து வரும் குப்பன் என்பவரின் மகன் கோபிசந்த்(13) எட்டாம் வகுப்பு படித்து வந்தார். இவர்கள் இரண்டு பேரும் நண்பர்களாக பழகி வந்தனர். இந்நிலையில் இரண்டு பேருக்கும் கண்வலி ஏற்பட்டதால் பள்ளிக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து நேற்று முன்தினம் இவர்கள் இரண்டு பேரும் திடீரென மாயமாகியுள்ளனர்.

பின்னர் உறவினர்கள் அவர்களை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அப்போது அவர்கள் இருவரும் ஒரே சைக்கிளில் சென்றதாக தகவல் கிடைத்ததை தவிர வேறு எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனையடுத்து பூவாலம்பேடு கிராமம் திடீர் நகர் பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் இருவரும் பிணமாக கிடப்பதாக  பெற்றோருக்கு தகவல் கிடைத்துள்ளது. அங்கு சென்று பார்த்த போது கிணற்றில் குளிக்க சென்ற சிறுவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கும்மிடிப்பூண்டி போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் 2 பேரின்  உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |