சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே மணச்சை பகுதியில் இரண்டாம் போக நெல் சாகுபடி கிணற்று பாசனம் மூலம் நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ஒரு சில மாதங்களுக்கு முன்பு சாகுபடி செய்யப்பட்ட பயிர்களை அறுவடை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்றது. அதன் பின் தற்போது மீண்டும் நெல் சாகுபடி பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி அருகே மணச்சை பகுதியில் 2-ம் போக நெல் சாகுபடி கிணற்று பாசனம் மூலம் நடைபெறுகிறது. இதனால் அப்பகுதியில் நெற்பயிர்கள் தற்போது நன்கு வளர்ந்து காண்போரின் கண்ணைக் கவர்ந்திழுக்கும் வண்ணம் பச்சை பசேலென காட்சியளிக்கிறது.