Categories
அரசியல் மாநில செய்திகள்

கிண்டல் அடிச்சுட்டு இருக்காங்க… இது காங்கிரஸ் கட்சியின் சதி… புது குண்டை தூக்கி போட்ட குஷ்பூ …!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜக கட்சியை சேர்ந்த நடிகை குஷ்பூ, மரியாதைக்குரிய நரேந்திர மோடி அவர்களுக்கு பஞ்சாப்பில் நடந்த நிகழ்வை பார்க்கும் பொழுது, இது நிச்சயமாக காங்கிரஸ் சார்பாக செய்த ஒரு சதி என நமக்கு தெரிகிறது. ஒரு மாநில முதலமைச்சர் பிரதமர் எந்த வழியாக வருகிறார் ? எப்படி வருகிறார் ? எந்த வழியாக போகப்போகிறார் ?

போலீஸ்காரர்களுக்கு அதை பத்தி தெரியாது,  எனக்கும் அதுபற்றி தெரியாது என அவர் சொல்லும்போது, இது அபத்தமான பொய் தான் என்று நம்ம எல்லாரும் தெரிகிறது. ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்திற்கு போகும்போது, ஒரு அமைச்சர் போனாலும் எந்த அளவுக்கு செக்யூரிட்டி இருக்கும்,  பாதுகாப்பு இருக்கும், எல்லா வசதியும் பண்ணி கொடுப்பாங்க.

ஆனால் பிரதமரே வரும் போது எங்களுக்கு இதைப் பற்றி தெரியாது, அப்படின்னு சொல்லும் போது நிச்சயமாக இது வந்து ஒரு பொய்யான சாக்கை அவங்க கொடுத்து இருக்காங்க. அது மட்டும் போதாதுன்னா கேலியா பேசிட்டு இருக்காங்க. அந்த மாநிலத்தின் உடைய  முதலமைச்சராய் இருக்கட்டும், இல்ல மத்த காங்கிரஸ் கட்சியில் இருப்பவர்களாகட்டும்… இதை ஒரு கேலி விஷயமாக பாத்துட்டு இருக்காங்க, கேலி செய்து கொண்டிருக்கிறார்கள் என தெரிவித்தார்.

Categories

Tech |