சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி,சோழிங்கநல்லூர் தொகுதியில முப்பது ஆண்டுகால கோரிக்கை… மாண்புமிகு அம்மாவுடைய அரசு நிறைவேற்றி தந்திருக்கிறது. ஏழை எளிய மாணவர்களுக்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை கொடுத்திருக்கிறோம். சோழிங்கநல்லூரில் மருத்துவ சிகிச்சை பெற 8 அம்மா மினி கிளினிக் இருக்கு.
தமிழ்நாடு முழுவதும் 2000 அம்மா மினி கிளினிக் திறந்துளோம். ஏழை மக்கள் அதிகமாக வசிக்கின்ற பகுதியில் அம்மா மினிகிளினிக் திறந்து அங்கே ஒரு டாக்டர், செவிலியர், மருத்துவ உதவியாளரை நியமித்துள்ளோம். ஏழைகளுக்கு தலைவலி, காய்ச்சல், சிறு நோய் வந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம்.
உங்களுடைய ஆட்சியில் இருந்ததா ? அதை கிண்டல் அடிச்சி பேசுறாங்க. எடப்பாடி பழனிச்சாமி ஒரே நேரத்தில் இரண்டாயிரம் அம்மா மினி கிளினிக்கை திறப்பதாக சொன்னாரு… எங்கே திறந்து இருக்கிறது என சொன்னார் ? வா , நான் காட்டுறேன். திறந்துகிட்டே இருக்கிறோம். இரண்டாயிரம் மினி கிளினிக் திறந்து கொண்டே இருக்கின்றோம். அதில் எந்த குறையும் கிடையாது.இந்த மாதிரி இறுதிக்குள் அனைத்தும் திறந்து உரிய சிகிச்சை மக்களுக்கு வழங்கப்படும்.
ஏழை மக்களுக்கு சிகிச்சை அளிப்பதை கூட பொறுத்துக்கொள்ள முடியாத ஸ்டாலின், நீதிமன்றத்துக்கு தட்டி விட்டுட்டாரு. நீதிமன்றத்துக்கு போய் வழக்கு போட்டாங்க. அதுதான் காலதாமதம் ஆக்கிவிட்டு. இந்த டாக்டர் நியமிக்க முடியாது, இந்த உதவியாளர் நியமிக்க கூடாது என்று நீதிமன்றத்தில் வழக்கத்தை தொடர்ந்த காரணத்தால் சற்று கால தாமதம் ஆகிவிட்டது.
நீதிமன்றம் நமக்கு அந்த தீர்ப்பை கொடுத்துவிட்டது. அந்தந்த மாவட்ட ஆட்சித்தலைவர்கள் அம்மா மினி கிளினிக்கில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களை நியமிக்கும் பணிகளை செய்து வருகின்றார்கள். பல பகுதிகளில் அம்மா மினி கிளினிக் திறக்கப்பட்டு விட்டது. எஞ்சிய அனைத்து பகுதிகளிலும் இந்த மாத இறுதிக்குள் அம்மா மினி கிளினிக் தொடங்கி நடைபெறும் என முதல்வர் தெரிவித்தார்.