பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கை.களத்தூர் கிராமத்தில் ராமசாமி(53) என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ராமசாமியும் உறவினரான மாரிமுத்து(30) என்பவரும் அப்பகுதியில் வசிக்கும் சிறுமியை கேலி, கிண்டல் செய்து மிரட்டியுள்ளனர். இதனால் மன உளைச்சலில் கடந்த 25-ஆம் தேதி சிறுமி பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் சிறுமியை சேலத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட வருகிறது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் ராமசாமி மற்றும் மாரிமுத்து ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.