காதலனை காதலி கிண்டல் செய்த காரணத்தினால் கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜாலாவார் மாவட்டம் அமிர்புரா கிராமத்தை சேர்ந்த ஜூபர் என்ற நபர், அதே பகுதியை சேர்ந்த பூஜா என்ற பெண்ணை இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இதை அறிந்த பூஜாவின் தந்தை அவரை பலமுறை தனது மகளுடனான காதலை கைவிடுமாறு எச்சரித்துள்ளார். பலமுறை அவரை தாக்கியுள்ளார். அதன்பிறகு பூஜா தனது காதலனிடம் சென்று தனது தந்தை தாக்கியதை கூறி கிண்டல் செய்துள்ளார்.
மேலும் தன்னை மறந்து விடுமாறு கூறி அவரை விட்டு பிரிந்து சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காதலன் பூஜாவையும் அவரது தந்தையையும் பழிவாங்க வேண்டும் என்று முடிவெடுத்துள்ளார். இதையடுத்து கடந்த வாரம் பூஜா வயலில் இருந்த பொழுது அங்கு சென்ற அவர் பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு பின்னர் அங்கிருந்து ஓடிவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் தலைமறைவாக இருந்த அவரை கைது செய்துள்ளனர்.