நடிகர் மம்முட்டி நான்கு முறை தேசிய விருது பெற்ற நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் மலையாளம் தவிர இந்தி, தமிழ் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் கேரளாவில் ஒரு பிரபல நடிகராவார். இந்திய அரசின் பத்மஸ்ரீ விருதை 1998 இல் பெற்றார். அவரது வாழ்வில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக, முன்னணி நடிகராக 400 திரைப்படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். இவர் பல முக்கிய விருதுகளை அவரது நடிப்புத் திறமைக்காகப் பெற்றுள்ளார்.
இவ்வாறு புகழ் பெற்ற நடிகர் மம்முட்டி கோழிக்கோட்டில் தனியார் மருத்துவமனையில் ரோபோடிக் அறுவை சிகிச்சை துவக்க விழாவில் பேசியபோது, தன்னுடைய இடது கால் தசை நார் சேதத்திற்கு அறுவை சிகிச்சை செய்தால் கால் குட்டை ஆகிவிடும் என்பதாலும், இதனால் தன்னை மற்றவர்கள் கிண்டல் செய்வார்கள் என்பதாலும் 26 ஆண்டுகளாக அறுவைசிகிச்சை செய்யவில்லை என்று தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.