Categories
மாநில செய்திகள்

கிண்டி பயிற்சி மையத்தில் 18 பேருக்கு கொரோனா… அதிர்ச்சி தகவல்..!!

சென்னை கிண்டியில் உள்ள மத்திய அரசின் பயிற்சி மையத்தில் 18 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். இதன் காரணமாக தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற வழிமுறைகளை நடைமுறைப்படுத்தி வருகிறது. மேலும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு அனைத்து மக்களிடமும் வலியுறுத்தப்பட்டு வருகின்றது. இருப்பினும் தொற்று அதிகரித்த வண்ணமே உள்ளது.

தற்போது சென்னை கிண்டியில் உள்ள மத்திய அரசின் தொழிற்பயிற்சி மையத்தில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பயிற்சி பெறும் இளைஞர்கள், ஆசிரியர்கள் என மொத்தம் 150 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதை தொடர்ந்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார்.

Categories

Tech |