கிம் ஜாங்கின் மருமகன் கிம் ஹான் சோல் அமெரிக்க உளவாளிகளால் கடத்தப்பட்டிருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
வடகொரிய தலைவர் கிம் ஜாங்ன் மருமகனான ஹான் சோல் தனது தாயார் மற்றும் சகோதரியுடன் நாட்டை விட்டு வெளியேறி நெதர்லாந்து செல்ல திட்டமிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் அங்கு புகலிடம் கோருவதற்காக தனது குடும்பத்துடன் தப்பி செல்ல விரும்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இதையடுத்து தைவான் தலைநகர் தைபே நகருக்கு சென்ற அவர் விமான நிலையத்தில் வைத்து free joseon அமைப்பின் ஆதரவாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.
அப்போது அந்த அமைப்பானது கிம் ஹான் சோலிடம் மூன்று நாடுகளில் புகலிடம் கோருவது சம்பந்தமாக விவாதம் நடத்தியதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து ஆம்ஸ்டர்டாம் செல்ல தயாரான நிலையில் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் அமெரிக்க உளவாளிகள் குழு ஒன்று கிம் ஹான் குடும்பத்திடம் சந்திப்பில் ஈடுபட்டதையடுத்து, கிம் ஹான் சோல் மற்றும் அவரது குடும்பத்தினர் காணாமல் போய்விட்டனர் என்று கூறப்படுகிறது. இதனால் அமெரிக்க உளவாளிகள் அவர்களை கடத்தியிருக்கலாம் என்று அமெரிக்க பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சில வருடங்களுக்கு முன்பு மலேசிய விமான நிலையத்தில் கிம் ஹான் தந்தையான கிம் ஜாங் நாம் மர்மமான முறையில் ரசாயன பொடி தூவி கொல்லப்பட்ட வழக்கை மொத்தமாக சீர்குலைத்த நிலையில், தற்போது அவரது மகன் உள்ளிட்ட குடும்பத்தினரை அமெரிக்க உளவாளிகள் கடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.