Categories
உலக செய்திகள்

கியாஸ் சிலிண்டர்களுடன் வெடித்த லாரி… 217 பேர் படுகாயம்… கரும் புகையால் சூழ்ந்த ஈரான்…!!!

ஈரானிலிருந்து லாரியில் எடுத்துச் செல்லப்பட்ட கியாஸ் சிலிண்டர்கள் வெடித்ததால் 217 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

ஈரானின் மேற்கு பகுதியில் இருக்கின்ற இலம் மாகாணத்தில் இருந்து க்ளோரின் கியாஸ் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு கன்டெய்னர் லாரி ஒன்று ஈராக்குக்கு புறப்பட்டு சென்றது. அந்த லாரி நேற்று முன்தினம் இரவு இலம் மாகாணத்தில் இருக்கின்ற சஞ்ஜிரா என்ற கிராமத்திற்கு அருகே நின்று கொண்டிருந்த சமயத்தில் லாரியில் இருந்த கியாஸ் சிலிண்டர்கள் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. அதனால் லாரி முழுவதுமாக தீப்பற்றிக் கொழுந்து விட்டு எரிந்தது. மேலும் அந்தப் பகுதி முழுவதுமாக கரும் புகை மண்டலம் சூழ்ந்தது.

விபத்தின் போது அந்த சாலையின் வழியே சென்று கொண்டிருந்த பலர் படுகாயமடைந்துள்ளனர். அதுமட்டுமன்றி சிலிண்டர்களில் இருந்து குளோரின் வாயு கசிந்த்தால், காற்றில் முழுவதுமாகப் பரவி அதனை சுவாசித்த மக்கள் அனைவருக்கும் மூச்சு திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்தமாக 217 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். லாரி டிரைவரின் அலட்சிய போக்கால் இந்த கோர விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. அதனால் காவல்துறையினர் லாரி டிரைவரை கைது செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |