தீ விபத்தில் 2 பேர் பலியான நிலையில், 10 பேர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், தேவரியம்பாக்கம் பகுதியில் தனியார் கியாஸ் சிலிண்டர் குடோன் அமைந்துள்ளது. இங்கு நேற்று மாலை திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்ததால் ஊழியர்கள் அலறியடித்து கொண்டு வெளியே ஓடி வந்தனர். மேலும் அருகில் இருந்த குடியிருப்பு பகுதிக்கும் தீ வேகமாக பரவியது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதனால் படுகாயமடைந்த கிஷோர்(13), கோகுல்(22), பூஜா(19) உள்பட 12 பேரை தீயணைப்பு வீரர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.