Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கியாஸ் நிரப்பும்போது திடீரென தீப்பிடித்த கார்… பெரும் பரபரப்பு.. தீவிர விசாரணையில் போலீஸ்…!!!!!

பொள்ளாச்சி உடுமலை சாலையை சேர்ந்த டேனியல் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு பாலக்காட்டில் உள்ள ஒரு கேஸ் விற்பனை நிலையத்தில் தனது காருக்கு கேஸ் நிரப்ப வந்துள்ளார். அங்கு அவரது காருக்கு ஊழியர்கள் கேஸ் நிரப்பிக் கொண்டிருந்த போது திடீரென காரின் முன் பகுதி தீப்பிடித்து எரிந்தது. இதனையடுத்து சிறிது நேரத்தில் கார் முழுவதுமாக தீ  கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. உடனடியாக ஊழியர்கள் அனைவரும் அலறி அடித்தபடி ஓட்டம் பிடித்துள்ளனர்.

இந்நிலையில் கார் உரிமையாளர் டேனியல் கேஸ் நிரப்பும் இடத்தில் இருந்த அவரது காரை தீயுடன் தள்ளிவிட்டார். இதில் சிறிது தூரம் சென்ற கார் அங்கு இருந்த சுவற்றில் மோதி நின்றது. இது குறித்து தகவல் அறிந்து  சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்துள்ளனர். கேஸ் விற்பனை நிலையத்தை சுற்றிலும் திருமண மண்டபங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் அதிக அளவில் இருப்பதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |